Vellore Information

Tamil Astrology & Matrimonial Services in Vellore

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்- 2017: மேஷ ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்வோம்?


மேஷம் ராசியினருக்கு ஆங்கில புத்தாண்டு எப்படி

2017 புத்தாண்டு ராசி பலன்கள் அனைத்தும் பொதுவானவை ஜன்ம லக்கின ராசியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள பலன்களாகும். மேஷ ராசிக்கான பலன்களை தெரிந்து கொள்வோம். 2017ம் ஆண்டு ஆரம்பத்தில் சனி பெயர்ச்சியும் ஆகஸ்ட் மாதம் ராகு கேது பெயர்ச்சியும், செப்டம்பரில் குரு பெயர்ச்சியும் நிகழ உள்ளது. அவரவருக்கென்று தனியாக இருக்கும் ஜாதக லக்கினம் தசாபுத்தி பலன்கள், குணாதிசயம், ராசி பலன்கள் மாறுபடலாம். ஜாதகத்தில் சுபபலன்கள் தரக்கூடிய தசை புக்தி அந்தரங்கள் நடக்குமானால் இங்கே கோசார ரீதியாக சொல்லப்பட்டுள்ள நற்பலன்கள் கூடும் கெடுபலன்கள் குறையும்.



ஜாதக பலமும் சிறப்பாக இல்லாமல் கோசாரமும் அனுகூலமாக அமையாமல் போனால் கெடுபலன்கள் அதிகமாகும். இப்படிப்பட்ட கிரக நிலை அமையப் பெற்றவர்கள் கிரகப் பிரீதி கோயில் வழிபாடு தான தர்ம காரியங்கள் ஆகியவற்றின் மூலம் அதிக சங்கடங்கள் ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். பொதுவாக நற்பலன் தரக்கூடிய குரு மற்றும் தீய பலன் தரக்கூடிய சனியின் கோசார நிலையைக் கொண்டு புத்தாண்டில் நிகழக்கூடிய நல்ல கெட்ட பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. கோசார கிரகங்களின் நற்பலன்களை அதிகப்படுத்திக்கொள்ளவும் தீய பலன்களை குறைத்துக் கொள்ளவும் அன்பர்கள் அவரவர்களின் இஷ்ட தெய்வங்களை வழிபடுவது சிறப்பு.



மேஷம் ராசியினருக்கு ஆங்கில புத்தாண்டு எப்படி?

2017 புத்தாண்டு பொதுவாக உங்களுக்கு நல்லவிதமான பலன்களை அள்ளி அள்ளி கொடுக்கப்போகிறது. ஆண்டின் பிற்பகுதியில் பண வரவு சரளமாக இருக்கும். கடன்கள் எல்லாம் தீர்வாகும் பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வந்துவிடும். இந்த புத்தாண்டின் தொடக்கத்திலிருந்தே தொழில் உத்தியோகம் சிறப்படையும் இது வரை தடைபட்டிருந்த தொழில் கொஞ்சம் கொஞ்சமாக விருவிருப்படையும். பரம்பரை தொழில் நல்லபடியாக செழித்து வளரும். தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். தொழில் லாபம் அதிகரிக்கும். சனி பகவான் ஜனவரி மாதம் 26ம் தேதி விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். மேஷ ராசிக்கு 9ம் இடத்தில் சனி பகவான் அமர்வதால் நற்பலன்கள் அதிகரிக்கும். இதே போல குருபகவான் செப்டம்பர் 12ம் தேதியன்று கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்கிறார். இது உங்கள் ராசிக்கு ஏழாம் இடம் ஆகும். துலாம் ராசியில் அமரும் குரு பகவான் உங்கள் ராசியை சம சப்தம பார்வையிடுவது சிறப்பு. ஆண்டு துவக்கத்தில் ராகு 5ம் இடத்தில் இருக்கிறார். கேது 11ம் இடத்தில் இருக்கின்றனர். ஆகஸ்ட் மாதத்தில் 18ம் தேதியில் இருந்து ராகு கடகத்திற்கும், கேது மகரத்திற்கும் இடப் பெயர்ச்சியடைகின்றனர். இது மேஷ ராசிக்கு ராகு 6ம் இடத்திற்கும் கேது 11ம் இடத்திற்கும் பெயர்ச்சியடைகின்றனர். இனி 12 மாதங்களுக்கும் என்னென்ன பலன் நடைபெறும் என்பதை பார்க்கலாம்.



ஜனவரி - தொழிலில் இடமாற்றம் :

மாதக் கடைசியில் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும் புதிய தொழில் வாய்ப்புகள், தொழில் உத்தியோகம் சம்பந்தமாக இடமாற்றம் உண்டாகும். 14ந் தேதிக்குப் பிறகு புதிய இடத்தில் பணியில் அமரும் நிலை உண்டாகும். பணியில் கொஞ்சம் மன ஈடுபாடு குறைவாக இருக்கும். வெளியூர் பயணம் காரணமாக செலவுகள் அதிகரிக்கும் சிலர் வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. மாதக் கடைசியில் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும்.



பிப்ரவரி - சுப செய்தி வரும் :

மாத ஆரம்பத்திலிருந்தே உத்தியோகம் சிறப்பாக இருக்கும். சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு 03ம் தேதி அலுவலகத்திலிருந்து உத்தரவு கிடைக்கும். 13ம் தேதிக்குப் பிறகு சம்பள உயர்வு கிடைக்கலாம். 27ம் தேதிக்குப் பிறகு கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சுபமங்கள தகவல் வந்துசேரும்.



மார்ச் - புத்திசாலித்தன காரியம்:

இந்த மாதம் 14ம் தேதிக்குப் பிறகு அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு எதிர்பார்த்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மாத ஆரம்பத்தில் உறவினர் ஒருவர் காலமாகலாம். 27ம் தேதிக்குப் பிறகு புத்திசாலித்தனமாக சமயோசிதமாக காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.



ஏப்ரல் - வருமானம் அதிகரிக்கும்:

மாத ஆரம்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். 14ம் தேதிக்குப் பிறகு அப்பாவின் வகையில் ஆதாயம் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு இம்மாதம் 13ம் தேதிக்குப் பிறகு வருமானம் அதிகரிக்கும்.



மே - சகோதரர்களால் நன்மை:

வீடு நிலம் வகையில் செலவுகள் அதிகரிக்கும். 15ம் தேதிக்குப் பிறகு புதிதாக வாகனம் வாங்குவீர்கள். 27ம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். நிலபுலன்களில் முதலீடு செய்வீர்கள். சகோதரர்களால் பணவரவு உண்டாகும்.



ஜூன் - பணவரவு :

மாத ஆரம்பத்தில் பூர்வீக சொத்திலிருந்து பணவரவு தாராளமாக இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் அப்பா சம்பாதித்த பூர்வீக வீட்டை விற்பனை செய்யும் நிலை உண்டாகலாம். தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகலாம். தகவல் தொடர்பு சிறப்பாக இருக்கும். <



ஜூலை - கடன்கள் தீரும்:

மாதத்தின் ஆரம்பத்தில் அலைச்சல் அதிகரிக்கும் 17ம் தேதிக்குப் பிறகு புதிதாக நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு நிலம் வாங்குவதில் எச்சரிக்கையாக இருக்கவும். 21ம் தேதிக்குப் பிறகு வாங்கிய கடன்கள் தீர்வாகும். 26ம் தேதிக்குப் பிறகு ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.



ஆகஸ்ட் - பூர்வீ க சொத்து :

குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் மாதமிது. பூர்வீக சொத்து கிடைக்கப் பெறுவீர்கள் உல்லாசப் பயணம் செல்வீர்கள். புதிதாக வாகனம் வாங்கும் வாய்ப்பு இருக்கிறது. பழைய வீட்டை வாங்கி புதுப்பீர்கள். அம்மாவின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.



செப்டம்பர் - பொருளாதாரத்தில் கவனம்:

பரம்பரை நிலம் வீடு வகையில் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகலாம். வியாபாரத்தில் கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாலினரிடம் நட்புறவு சிறப்படையும். கைக்கு வந்த காசு கையில் நிற்காது. பொருளாதார விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய மாதம் இது.



அக்டோபர் - தடை நீங்கும்:

அப்பா வகையில் நெருங்கிய உறவினர் ஒருவர் காலமாவார். சகோதர சகோதரிகளிடம் நல்லுறவு பாராட்டுவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும் பண வரவு அதிகரிக்கும். மனைவியிடம் சச்சரவு செய்வதை தவிர்ப்பது நல்லது.



நவம்பர் - பெண்களால் அதிர்ஷ்டம்:

அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் தொல்லை உண்டாகலாம். எச்சரிக்கையாக இருக்கவும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். மனதில் எரிச்சல் அதிகரிக்கும். பெண்களால் அதிஷ்டம் அதிகரிக்கும்.



டிசம்பர் - ஆன்மீக சுற்றுலா :

குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். அடிக்கடி அலுவலகத்திற்கு விடுப்பு போட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். மனைவிக்கு வேண்டியதை எல்லாம் வாங்கி கொடுப்பீர்கள்.



**************

மார்கழி மாத பொது ராசி பலன்கள் : மேஷம் ராசி முதல் மீனம் ராசி வரை & அதற்கான பரிகாரங்களும் :


மார்கழி மாத ராசிபலன்

மேஷ ராசி:

அப்பாவுடன் கருத்து வேறுபாடு உருவாகும். அரசு வகையில் சங்கடங்களை சந்திக்க வேண்டி இருக்கும். பொருளாதர நிலை சுமாராக இருக்கும். குழந்தைகளால் மனக் கஷ்டம் உருவாகும். 14ம் தேதிக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் உருவாகும். 17ஆம் தேதிக்கு பிறகு படிப்பில் மேன்மை நிலை அடையலாம். தொழில் தொடர்பான சுப செய்திகள் வந்து சேரும். 20ம் தேதிக்கு பிறகு எண்ணியவை யாவும் எளிதில் கைகூடும். பதவி உயர்வை எதிர் நோக்கி இருப்பவர்களுக்கு விருப்பம் நிறைவேறும். அஷ்டம சனி சில மனகஷ்டங்களையும் தொழிலில் மந்தத்தையும் தரும். இருப்பினும் மன தைரியத்துடன் எதையும் எதிர் கொள்வீர்கள். பல வகைகளிலும் செலவுகள் அதிகரிக்கும். கைலாசநாதரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களை பெறலாம்.



ரிஷபம் ராசி:

உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். 17ம் தேதிக்கு பிறகு கமிஷன் வியாபாரத்தில் கவனம் தேவை. தகவல் தொடர்பு மந்தமாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இடையூறு உண்டாகும். கண்டக சனி உடல் அசௌகரியத்தைக் கொடுப்பார். பொருளாதாரம் மந்தமாக இருக்கும். சுகபோகங்களில் மன ஈடுபாடு குறையும். புத்தி தடுமாற்றம் உண்டாகும். 20ம் தேதிக்குப் பிறகு அப்பாவின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். நிலம் வீடு வகைகளில் பிரச்சினை உருவாகும். ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். எல்லா வகையிலும் மனைவி உறுதுணையாக இருப்பார். அம்பாளை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களை பெறலாம்.



மிதுனம் ராசி:

தொழில் உத்தியோகம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். 14ஆம் தேதியிலிருந்து குடும்பத்தில் இருந்து வந்த பூசல் மாறி கணவன் மனைவி அன்னியோனியம் அதிகரிக்கும். பண வரவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். 17ஆம் தேதிக்கு பிறகு ஷேர் மார்க்கெட் வியாபாரம் லாபம் தரும். எதிர்பார்க்கும் சுப செய்தி வந்து சேரும். 20ஆம் தேதிக்கு பிறகு வாகனப் போக்குவரத்தில் கவனமாக இருக்கவும் வாகன விபத்துகளுக்கு வாய்ப்புகள் உண்டு. அம்மாவின் ஆரோக்கியம் குறையும். தொழிலில் புது எதிரிகள் உருவாவார்கள். சூரிய நாராயணனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களை பெறலாம்.



கடகம் ராசி:

தொழில் நிலை சுமாராக இருந்தாலும் உத்தியோகம் தொடர்பான அரசாங்க உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அப்பாவும் உறுதுணையாக இருப்பார். 14ஆம் தேதிக்கு பிறகு குடும்பத்தில் சச்சரவுகள் தோன்றும். பெண்களினால் பிரச்சினைகள் உருவாகும். 17ஆம் தேதிக்கு பிறகு சிந்தனைகள் தடுமாறும். படிப்பில் கவனம் செல்லாது. 20ஆம் தேதிக்கு பிறகு சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உருவாகும். வாகனங்களை கையாளுவதில் கவனம் தேவை. எவ்வகை கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டாலும் மனதில் தைரியம் குறையாது. ஆலய வழிபாடுகளில் நாட்டம் உண்டாகும். பழனியாண்டவரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.



சிம்மம் ராசி:

தொழில் உத்தியோகம் வகைகளில் மிகவும் நிதானமாக செயல்பட வேண்டும். சிறிய வேலையும் அதிக அலைச்சலுடன் செயல் படுத்தவேண்டியிருக்கும். தந்தையின் ஆரோக்கியமும் கவலை தருவதாக அமையும். 14ம் தேதிக்கு பிறகு கணவன் மனைவி ஒற்றுமை குறையும். அதிகமான செலவினங்களால் மனநிலை பாதிப்படையும். குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் தோன்றும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. 17ஆம் தேதிக்கு பிறகு வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். தாய் மாமனின் உதவி கிடைக்கும். 20ஆம் தேதிக்கு பிறகு நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில்களில் கவனம் தேவை. கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களை கையாளுவதிலும் கவனம் தேவை. உறவினர் அனைவரிடமும் பகைமை உண்டாகும். காலபைரவரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.



கன்னி ராசி:

தொழிலில் முன்னேற்றாம் உண்டாகும் இருப்பினும் உயர் அதிகாரிகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பண வரவு நினைத்ததை விட அதிகமாக இருக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிற்கு மகிழ்ச்சியை தரும். மனதில் இனம் புரியாத பயம் தோன்றும். யாரைப் பார்த்தாலும் மனம் தடுமாறும். 17ஆம் தேதிக்கு பிறகு பங்கு வர்த்தக முதலீடுகளை தவிர்க்கவும். தகவல் தொடர்பு சரியானவகையில் அமையாது. 20ஆம் தேதிக்கு பிறகு சகோதர்களிடையே இருந்து வந்த பூசல் மறையும். நிலம் வீடு வகையில் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்குவரும். கணவன் மனைவி அன்னியோனியம் அதிகரிக்கும். விலையுயர்ந்த ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். சிவ சங்கரனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம். <



துலாம் ராசி:

குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் அமைதியாக செயல்படவேண்டும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வரவை விட செலவுகள் பன்மடங்கு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணிபுரியுமிடத்தில் அதிகாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். 17ஆம் தேதிக்கு பிறகு வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். கல்வியில் மேன்மை உண்டாகும். 20ம் தேதிக்கு பிறகு வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. நெருப்பினால் காயம் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. மருத்துவ செலவுகளும் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். ஐயனாரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.



விருச்சிகம் ராசி:

தொழில் காரணமாக மனம் பேதலிக்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. பணவரவு சுமாராக இருக்கும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். குழந்தைகளால் மனக் கஷ்டம் உருவாகும். 17ம் தேதிக்கு பிறகு தாய்மாமனுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். படிப்பில் மந்தநிலை காணப்படும். 20ஆம் தேதிக்கு பிறகு ரியல் எஸ்டேட் தொழில் லாபகரமாக அமையும். அண்ணன் தம்பிகளுக்கிடையே உறவு பலப்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். விருந்துகளில் பங்கு பெற்று சந்தோஷமாக இருப்பீர்கள். நடராஜரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.



தனுசு ராசி:

அனைவரையும் அதிகாரம் செய்யும் எண்ணம் ஓங்கும். கோபம் அதிகரிக்கும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. தொழிலில் மந்த நிலை காணப்படும் எதிர்பாராத செலவினங்கள் அதிகரிக்கும். நிலம் வீடு வகைகளில் பிரச்சினைகள் தோன்றும் தொழிலில் புதிய எதிரிகள் உருவாகுவார்கள். 17ஆம் தேதிக்கு பிறகு உறவினர்களுடன் இருந்து வந்த சச்சரவுகள் மாறி உறவு நிலை சீரடையும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த சுப தகவல் வந்து சேரும். 20ஆம் தேதிக்கு பிறகு சகோதரர்களின் உதவி கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் சிறக்கும். வாகன யோகம் உண்டாகும். எல்லா விஷயங்களிலும் மனைவியின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். விநாயகரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.



மகரம் ராசி:

தொழில் சிறப்பாக இருக்கும். பணவரவும் மோசமில்லை. அப்பாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூர்வீக சொத்து வகைகளில் உருவாகும் பிரச்சினையை கவனமாக கையாளவும்.அரசாங்க வகைகளில் மிகவும் கவனமாக செயல்படவும். கோபத்தைக் கட்டுபடுத்திக் கொள்ளவும். 20ம் தேதிக்குப் பிறகு மௌனத்தை கடைபிடிப்பது சாலசிறந்தது. எவரிடமும் விவாதம் வேண்டாம். பயணங்களை தவிர்க்கவும். வியாபாரம் படிப்பு போன்றவைகளில் மந்த நிலை நீடிக்கும். வீட்டுக்கு தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். உல்லாசப் பயணம் செல்லும் நிலை உருவாகும். ஐயப்பனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.



கும்பம் ராசி:

தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். எதிர் பாராத பண வரவு உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும். உத்தியோகத்தில் அரசு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 20ம் தேதிக்கு பிறகு மனம் டென்சனாக இருக்கும். சகோதரர்களிடம் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். 17ம் தேதிக்குப் பிறகு தகவல் தொடர்பு வகைகளில் சிறப்பு குறைவு. கேளிக்கைகளில் மனம் நாட்டம் செல்லும். குடும்பத்தில் சிறு பிரச்சினைகள் தோன்றும். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. மஹாலட்சுமியை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.



மீனம் ராசி:

தொழில் உத்தியோகம் மன நிறைவு தரும். அன்றைய வேலையை அன்றே முப்பது சிறப்பு. அரசு வகைகளில் எதிர்பார்த்திருந்த தகவல்கள் வந்து சேரும். கமிஷன் வியாபாரம் சிறப்பாக இருக்கும். கல்வியில் மேன்மை நிலை உருவாகும். பண வரவு அபரிமிதமாக இருக்கும். 14ம் தேதிக்கு பிறகு விலை உயர்ந்த பட்டுப் புடவைகள் வெள்ளி மற்றும் பொன்னகைகளை வாங்குவீர்கள். 17ம் தேதிக்கு பிறகு தகவல் தொடர்பு மேம்படும். சுப தகவல்கள் வந்து சேரும். மன நிலை சற்று குழப்பமாக இருக்கும். பிறரிடம் பேசும் பொழுது மிகவும் கவனமாக இருக்கவும். பெருமாளை வணங்கி வாழ்க்கையில் வளங்களைப் பெறலாம்.



சனிப் பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 - மேஷம் இராசி முதல் மீனம் இராசி வரை பொதுப் பலன்கள் & பரிகாரங்களும் :

சனிப் பெயர்ச்சி 2014 - 2017 - மேஷம்  முதல் மீனம் வரை பொதுப் பலன்கள்-பரிகாரங்களும்

திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 26.01.2017 அன்று வியாழக்கிழமை இரவு 07.55 மணிக்கு சனி பகவான், விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார். இனி ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் சனிபெயர்ச்சி எப்படி இருக்கும்? சாதகமா-பாதகமா? என்பதையும், அத்துடன் ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் என்னென்ன சனிபெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.


மேஷ இராசி அன்பர்களே :

26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இனி உங்களுக்கு யோகம்தான் அஷ்டம சனியிலிருந்து விடுதலையாகி விட்டீர்கள். இப்பொழுது சனி பகவான் உங்கள் இராசிக்கு 9-ம் இடத்தில் அமர்ந்து பிரமாதமாக வாரி வழங்க போகிறார். இதுநாள்வரைபட்ட கஷ்டங்கள் பறந்து ஓடி விடும். 10,11-க்குரிய சனி பகவான், 9-ல் இருப்பதால் உத்தியோகம், தொழில் சிறப்பாக அமையும். பொருளாதாரம் வளர்ச்சி பெறும். பெற்றோர் உதவி கிடைக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு மேலதிகாரியின் பாராட்டும், உதவியும் கிடைக்கும். வழக்கில் வெற்றி தரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். இத்தனை நாள் இருந்த அலைச்சல் தீரும். இனி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் வரும் என்ற நம்பிக்கை உயர்ந்து நிற்க்கும். 11-ம் இடத்தை சனி பார்வை செய்வதால், வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்றுமதி தொழில் அமோகமாக இருக்கும். 6-ம் இடத்தை பார்வை செய்வதால், முன்னேற்றம் நன்றாக தரும். ஓரளவு கடன் தொல்லை அகலும். அதேநேரம் புதிய கடன் வாங்கச் செய்யும். ஆகவே கடன் விஷயத்தில் கவனம் தேவை. வாகனம் ஓட்டுவதிலும் கவனம் தேவை. பொதுவாக பாக்கிய சனி பதவி, அந்தஸ்து வாரி வழங்கும்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்:

உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். சனிக்கிழமையில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு செந்தூரம் வழங்கி வணங்குங்கள். செந்தூரத்தை தினமும் நெற்றியில் இட்டு வாருங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்குங்கள். ஸ்ரீ சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்


ரிஷப இராசி அன்பர்களே :

26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. உங்களுக்கு இது அஷ்டம சனி.அய்யோ சனி 8-ம் இடத்திற்கு வந்து விட்டதே? என்று பயப்பட வேண்டாம். ரிஷப இராசிக்கு சனி யோககாரகன். அஷ்டம சனியாக வந்தாலும் நிச்சயம் கெடுக்க மாட்டான். ரிஷப இராசிக்கு சனி தர்ம-கர்மாதிபதி. அவன் 2-ம் இடத்தை பார்வை செய்வதால் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள், குழப்பங்கள் தீரும். திருமணம் தடைபட்டு இருந்தால் இனி வீட்டில் மேள சத்தம்தான். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால், தெய்வ தரிசனம் அதிகரிக்கும். தெய்வஸ்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் அமையும். இழுத்துக்கொண்டு இருந்த வழக்கு உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். சொத்து-சுகங்கள் தேடி வரும். பல நாட்களாக பிடித்து வந்த நோய், நொடிகள் நீங்கி நலம் பெறுவீர்கள். புதிய திட்டங்கள் வெற்றி தரும். தொழில் ஸ்தானத்திற்கு 8-ம் இடத்தை சனி நோக்குவதால், புதிய தொழில் துவங்குவீர்கள். தொழிலில் நண்பர்களையும் சேர்த்துக் கொள்வதாக இருந்தால் உஷாராக இருங்கள். காரணம், 7-ம் இடத்திற்கு இரண்டாம் வீட்டில் சனி பகவான் உள்ளார். ஆனாலும் பொதுவாக இந்த சனி பெயர்ச்சி நீங்கள் மண்ணை தொட்டாலும் பொன்னாக்கும்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்:

சனிக்கிழமையில் சனிபகவான் சந்நதியில் எள் தீபம் ஏற்றுங்கள். சனிக்கிழமையில் நீல நிறமோ, அல்லது கருப்பு நிறத்திலோ ஆடை அணியுங்கள். காக்கைக்கு எள் கலந்த சாதத்தை சனி ஓரையில் வையுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.


மிதுன இராசி அன்பர்களே :

26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இதுநாள்வரையில் 6-ம் இடத்தில் இருந்த சனி பகவான், இப்போது 7-ம் இடத்திற்கு வந்திருக்கிறார். உங்கள் இராசிக்கு 9-க்குரிய சனி, 7-ல் வந்திருப்பது நன்மையே தரும். பொதுவாக பாக்கியாதிபதி, சப்தமஸ்தானத்திற்கு வந்தால் எப்பேர்பட்ட பிரச்னையாக இருந்தாலும் தீர்ந்து விடும். உங்கள் திட்டங்கள் நிறைவேறும். கல்வியால் நல்ல யோகம் உண்டு. உயர்கல்வி அமையும். அடமானத்தில் இருந்த பொருட்கள் கைக்கு வந்து விடும். புதிய வாகனம் வாங்கக்கூடிய சாதகமான நேரம் இது. ஆனாலும், ஜென்ம இராசியை சனி நோக்குவதால் அலைச்சல் அதிகரிக்கும். காரணம், தொழில், வேலை என்று புதிதாக அமைத்து தந்துவிடுவார் சனிபகவான். அதனால் அப்படிதான் இருக்கும். அதோடு சற்று டென்ஷனும் அதிகரிக்கும். ஜாமீன் கையெழுத்து மட்டும் போட வேண்டாம். பழைய வீட்டை இடித்து புது வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். நீண்ட நாட்களாக குடும்பத்தினர் கேட்டு வந்ததை வாங்கி தரும் யோகம் வந்து விட்டதால் அதை பூர்த்தி செய்வீர்கள். திருமணம் ஆனவர்கள் மனைவியால் நன்மை அடைவார்கள். பொதுவாக, சப்தம சனி சாதகம் செய்யும். சாகசமும் செய்ய வைக்கும். சோதனைகள் நீங்கி சாதனை படைப்பீர்கள்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்!

சோமவாரத்தில் (திங்கள்கிழமை) சோமேஷ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யுங்கள். ஏழை முதியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்


கடக இராசி அன்பர்களே :

26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. உங்கள் இராசிக்கு 6-ம் இடத்திற்கு சனி பகவான் வந்துவிட்டார். நினைத்ததை நடத்தி வைப்பான் சனி பகவான். நீங்கள் போடும் திட்டங்கள் அத்தனையும் வெற்றிதான். 6-ம் இடத்தில் அமர்ந்த சனி 9-ம் இடத்தையும், 12-ம் இடத்தையும் பார்வை செய்வதால் விரோதிகள், விரோதங்கள் பஞ்சு போல் பறந்து விடும். இதுநாள்வரை இருந்த வீண் விரயங்கள் இனி இருக்காது. பணவரவு தாராளமாக இருக்கும். 3-ம் இடத்தை பார்வை செய்வதால் தைரியலஷ்மியே உங்கள் வசம்தான். புதிய தொழில் பெரிய அளவில் அமையும். வெளிநாட்டு பயணமும், வெளிநாட்டவர்களால் லாபமும் உண்டு. தூங்கி கொண்டு இருந்தவர்களை இனி 6-ம் இடத்து சனி பகவான் தட்டி எழுப்புவான். புதிய நண்பர்களால் மிகுந்த ஆதாயம் உண்டு. வீட்டில் சுபநிகழ்ச்சிகள், திருமணங்கள் நடைபெறும். சுபநிகழ்ச்சிக்காக கடன் வாங்க வைக்கும். ஆகவே திட்டமிட்டு செலவு செய்யுங்கள். வேலைக்கு அலைந்துக்கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். பொதுவாக, 8-க்குரிய சனி 6-ம் இடத்தில் அமர்ந்ததால், கெட்டவன் கெட்டில் கிட்டிடும் இராஜயோகம்என்பதற்கேற்ப இனி உங்களுக்கு இராஜயோக வாழ்க்கைதான்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்:

ஸ்ரீரங்கநாதரை வணங்குங்கள். ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். சனிக்கிழமையில் புளியோதரை சாதத்தை 8 பேருக்கு தானம் செய்யுங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்


சிம்ம இராசி அன்பர்களே :

26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. அர்தாஷ்டம சனி விலகி விட்டது. அப்பாடா விட்டது தொல்லை என்று நிமிர்ந்து உட்காருங்கள். இப்பொழுது பஞ்சமஸ்தானமான 5-ம் இடத்திற்கு சனி பகவான் வந்து விட்டார். கேந்திராதிபதி திரிகோணத்தில் அமர்ந்து விட்டான். வாட்டி வதைத்த பிரச்னைகள் தீர்ந்து விடும். வதங்கிய பயிறும் வளர ஆரம்பிக்கும். இனி எப்படி போவது? எல்லாம் முட்டு சந்தாக இருக்கிறதே? என்ற கவலை இல்லை. HIGHWAY வந்துவிட்டது. பிறகென்ன? உங்களுக்கு உதவி செய்ய நல்ல மனம் படைத்தவர்கள் தாமே முன்வந்து உதவி செய்வார்கள். உங்கள் திட்டம் கச்சிதமாக முடியும். குடும்பத்தில் சச்சரவுகள், குழப்பம் இருந்தாலும் தீர்ந்து விடும். பஞ்சை எடுத்தாலே கையில் நூலாக மாறி விடும். போன சனிப்பெயர்ச்சியில் பட்ட கஷ்டங்கள் அடேங்கப்பா கொஞ்சமா நஞ்சமா? இனி அதுபோல் கஷ்டங்கள் வராது. இனி என்னென்ன செய்ய வேண்டும் என்று கனவு கண்டு நிறைவேற்ற நினைத்தீர்களோ அத்தனையும் அருமையாக செய்து முடிப்பீர்கள். பஞ்சம சனி, வேலை, தொழில், திருமண விஷேசங்கள் அத்தனையும் தருவதோடு, சிலருக்கு குழந்தை பாக்கியமும் கொடுக்கும். வாழ்க்கையே பாதகம் என்று வெறுத்து இருந்த உங்களுக்கு இனி வாழ்க்கையே சாதகம்தான்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்:

சனிக்கிழமையில் நீல நிறம் கலந்த வஸ்திரத்தை தானம் செய்யுங்கள். வியாழக்கிழமையில் விநாயகருக்கு அருகம்புல் வைத்து வணங்குங்கள். உங்கள் நட்சத்திரம் வரும் நாட்களில் தயிர் சாதத்தை 9 பேருக்கு தானம் செய்யுங்கள். சனி பகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்:


கன்னி இராசி அன்பர்களே :

26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. உங்களுக்கு சனி பகவான் உங்கள் இராசிக்கு 4-ம் இடத்தில் அமர்ந்து, அர்தாஷ்டம சனியாகிவிட்டான். சிலர் பயமுறுத்துவார்கள் ஆனாலும் பயப்பட வேண்டாம். பஞ்சமாதிபதி 4-ம் இடத்தில் அமர்ந்துவிட்டதால் கெடுதல் செய்ய மாட்டான். 6-ம் இடத்தையும், 10-ம் இடத்தையும், உங்கள் ஜென்மத்தையும் சனி பார்வை செய்வதால், ரோக நிவர்த்தி ஆகும். இதுவரை வட்டிக்கு வட்டி கட்டிக்கொண்டே இருந்த நீங்கள், இனி அசலையும் கொடுத்து கடனை அடைத்து விடுவீர்கள். பலநாட்களாக வேலைக்கு அலைந்தவர்கள் அக்கடா என்று புதிய வேலையில் அமர்ந்து விடுவார்கள். நசிந்த தொழிலை புதுப்பிப்பீர்கள். தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உட்கார நேரம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு வேலைகள் வந்த வண்ணம் இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் அத்தனையும் வாங்கி கொடுத்து அவர்களை திருப்திப்படுத்துவீர்கள். வழக்கில் இருந்த சொத்து கைக்கு வந்துவிடும். கண்ணில் காசையே பார்க்க முடியவில்லை என்று ஏங்கியவர்கள், கை நிறைய காசு என்று சந்தோஷப்படுவீர்கள். இதை நான் சொல்லவில்லை சனி பகவான் செய்து காட்டபோகிறார்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்:

சனிக்கிழமையில் எள் சாதத்தை காக்கைக்கு வைத்து வாருங்கள். சனிக்கிழமையில் நீல நிறத்திலோ அல்லது கருப்பு நீலத்திலோ ஆடை அணியுங்கள். பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.


துலா இராசி அன்பர்களே :

26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இத்தனை நாள் பாத சனியில் இருந்து படாதபாடுபட்ட நீங்கள் இனி நிம்மதியாக இருக்கலாம். சனிபகவான் 3-ம் இடத்திற்கு வந்துவிட்டார். பஞ்சமஸ்தானம், பாக்கியஸ்தானம், விரயஸ்தானத்தை பார்வை செய்வதால், எதிர்பார்த்த காரியங்கள் கைக்கூடும். வாடகை வீட்டில் வசதியில்லாமல் இருந்த நீங்கள், இனி சொந்த வீட்டில் குடிபோக போகிறீர்கள். சிலருக்கு பதவி உயர்வு வர வாய்ப்புள்ளது. குழந்தை பேறு உண்டாக, சனிபகவான் அருள் செய்வார். தாய்மாமன் வழியில் உதவிகள் கிடைக்கும். வங்கி உதவிகளும் தாராளமாக கிடைக்கும். நிதான பேச்சே வெற்றி தரும். பெற்றோருக்கு இருந்த மனக்குறை நீங்கும். கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். 12-ம் இடத்தை சனி பார்வை செய்வதால், தேவை இல்லாமல் செலவுகள் வரத்தான் செய்யும். வெளிநாட்டில் வேலை செய்து வருபவர்கள் சற்று சிரமமாகத்தான் இருப்பார்கள். சரி, சிரமம் இல்லாமல் சிகரம் ஏற முடியுமா? பஞ்சமஸ்தானத்தை அதாவது சனி, தன் சொந்த வீட்டை பார்வை செய்வதால், திக்கு தெரியாத காட்டில் இருந்து ஊருக்குள் வந்துவிட்டீர்கள். இனி யோக வாழ்க்கைதான்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்:

ஆனைமுகனை வணங்கி, உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் சூரத்தேங்காயை உடையுங்கள். விநாயகப்பெருமானுக்கு வஸ்திரம் அணிவித்து வணங்குங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்


விருச்சிக இராசி அன்பர்களே :

26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இதுநாள்வரை ஜென்மத்தில் இருந்த சனி உங்களை விட்டு விலகி விட்டான். அதாவது, தலையில் சுமந்து வந்த பாரத்தை இறக்கி வைத்து விட்டீர்கள். தற்காலம் சனி 2-ம் இடத்திற்கு வந்திருப்பதால் கைக்கு கை பணம் கிடைத்து பையை நிரப்பும். சுகஸ்தானத்தை சனிபகவான் பார்வை செய்வதால், தீராத வியாதியும் தீர்ந்து விடும். இனி டாக்டர் வீட்டுக்கு அலையவேண்டியதில்லை. தடைபட்ட கல்வி தொடர வாய்ப்பு வரும். பழைய வீட்டை புதுபிக்கும் நேரம் வந்து விட்டது. புதிய வாகனம் வாங்கும் உண்டு. சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படும். மேலதிகாரியிடம் கவனமாக இருக்க வேண்டும். புண்ணியஸ்தலங்களுக்கு போகும் பாக்கியம் கிடைக்கும். 9-ம் இடத்திற்கு 12-ல் சனி பார்வைபடுவதால், பெற்றோர் உடல்நலனில் சிறு, சிறு உபாதைகள் காட்டும். பிரமோஷன் வரவில்லை என்று ஏங்கியவர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்பு நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும். பாத சனி கெடுதல் செய்யும் என்பார்களே என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. சனி பகவான், சுக்கிரன் சாரத்தில் வந்ததால் கெடுக்காது – நல்லவற்றை வாரி கொடுக்கும்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்:

சனிக்கிழமையில் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை வையுங்கள். சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் சிவாலயத்திற்கு சென்று இறைவனை வணங்குங்கள். சனிபகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 8 முறை உச்சரித்து வாருங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கியும் வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.


தனுசு இராசி அன்பர்களே :

26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. சனிபகவான் உங்கள் ஜென்மத்தில் வந்தமர்ந்து விட்டான். அய்யோ சாமி… ஏற்கனவே ஏழரை சனி. தீராத குறைக்கு ஜென்ம சனியுமா? என்று பயப்பட வேண்டாம். சுக்கிரன் சாரத்தில் வந்துள்ளதால், கெடுதல் செய்ய மாட்டார். கீர்த்திஸ்தானம், சப்தமஸ்தானம், ஜீவனஸ்தானத்தை சனிபார்வை செய்வதால், சகோதர-சகோதரிகளுக்கு யோக காலம்தான். உங்களுக்கு திருமணம் தடைப்பட்டு வந்திருந்தால் இனி கவலையில்லை. திருமணம் பிரமாதமாக நடந்து விடும். போட்டி-பந்தயங்களில் வெற்றி கொடுக்கும். ஷேர் மார்கெட்டில் சிறிய லாபம் கிடைக்கும். திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். தொழில் ஸ்தானத்திற்கு 6-ம் இடத்தை பார்வை செய்வதால் பெரிய முதலீடு செய்யும்போது கவனமாக இருங்கள். அவசரம் பர,பரப்பு அடைய வைக்கும். பலநாட்களாக வாகனத்தை மாற்ற வேண்டும் என்கிற விருப்பம் நிறைவேறும். பழைய கடன் வசூலாகும். திருமணம் ஆனவர்கள் மனைவியின் உடல்நலனில் சற்று கவனம் தேவை. துணைவருக்கு சிறு,சிறு பிரச்னைகள் வரலாம். அரசாங்க ஆதரவு கிடைக்கும். கூட்டு தொழில் நன்றாக அமையும். பொதுவாக ஜென்ம சனியாக இருந்தாலும் அதிர்ஷ்ட காற்று பலமாக வீசும்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்:

அஞ்சனை மைந்தனை வணங்குங்கள். சனிக்கிழமையில் ஸ்ரீஅனுமனுக்கு வெண்ணை படைத்து வணங்குங்கள். உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் விநாயகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள். சனிஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி, சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்


மகர இராசி அன்பர்களே :

26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. வந்துவிட்டது ஏழரை சனி என்று பயந்துவிடாதீர்கள். பயமுறுத்த பலர் இருப்பார்கள். உங்களுக்கு வந்தது ஏழரைதான் ஆனால் சுக்கிரன் சாரத்தில் வந்திருப்பதால் நன்மைகளை அள்ளி கொடுக்காவிட்டாலும் கிள்ளியாவது சனிபகவான் கொடுப்பான். ஆனால் கெடுக்க மாட்டான். ருண-ரோகஸ்தானம், தனஸ்தானம், பாக்கியஸ்தானத்தை சனி பார்வை செய்வதால் கடன் சுமை நீங்கும். இதுநாள்வரை ஜவ்வு போல் இழுத்துக் கொண்டு இருந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கடன் வாங்கியாவது சொந்த வீடு வாங்கி விடுவீர்கள். உங்கள் வாக்கு மேன்மை பெறும். உடல்நலனில் மட்டும் கண்டிப்பாக கவனம் தேவை. தலை சம்மந்தப்பட்ட, வயிற்று சம்மந்தப்பட்ட பிரச்னைகள் சில நேரங்களில் ஏற்படலாம். கவனமாக இருக்கவும். பயணங்கள் அதிகரிக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும். மனைவியால் லாபம் உண்டு. மனைவியின் ஆலோசனை சரியாக இருக்கும். வாகனம் ஓட்டுவதில் கவனமும் பொறுமையும் தேவை. 12-ம் இடத்திற்கு சனிபகவான் வந்திருந்தாலும் கவலையில்லை. இந்த ஏழரை உங்களுக்கு வளமையும், பெருமையும் தரும்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்:

சனிக்கிழமையில் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளை வணங்குங்கள். வீட்டில் ஸ்ரீபார்த்தசாரதி படம் வைத்து அந்த படத்தின் முன் நெய் தீபம் ஏற்றி கல்கண்டு வைத்து வணங்குங்கள். சாதத்தில் எள் கலந்து காக்கைக்கு வையுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.


கும்ப இராசி அன்பர்களே :

26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு லாப சனியாக வந்துவிட்டது. அதாவது, சனிபகவான் உங்கள் இராசிக்கு 11-ம் இடத்திற்கு வந்துவிட்டார். இனியெல்லாம் யோகமே. தொட்டது துலங்கும். ஜென்ம இராசியையும், பஞ்சமத்தையும், அஷ்டமஸ்தானத்தையும் பார்வை செய்வதால், ஆண்டி போல் அலைந்தவர்கள் அரசனை போல் வாழப்போகிறீர்கள். ஆம், ஜென்மாதிபதி ஜென்மத்தை பார்வை செய்வதால் கஷ்டங்கள், நஷ்டங்கள் அத்தனையும் நடா புயல் போல் ஓடி விடும். பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். உத்தியோகத்தில் சிரமம், பளு குறையும். சிலருக்கு தொழில் துவங்கவும் வசதி ஏற்படும். கடன் பிரச்னை தீரும். பொதுவாக, மனக்குழப்பங்கள் அத்தனையும் தீர்ந்து விடும். தூரத்து உறவினரின் உதவி கிடைக்கும். தெய்வ பணிகள் அதிகரிக்கும். பேச்சில் மட்டும் நிதானம், பொறுமை தேவை. சகோதர உறவில் மகிழ்ச்சி ஏற்படும். வில்லங்கமான சொத்துக்கள் விஷயத்தில் சுமுகமாக பேசி முடிக்கும் சூழ்நிலை உருவாகும். கணக்கு-வழக்கில் கவனம் தேவை. லாப சனி யோக சனிதான்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்:

சர்வலோக நாயகனை வணங்குங்கள். சோமவாரத்தில் (திங்கள்கிழமை) வில்வ இலை சமர்பியுங்கள். உங்களால் முடிந்த ஏழை பிள்ளைகளுக்கு வஸ்திர தானம் செய்யுங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.


மீன இராசி அன்பர்களே :

26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. சனி பகவான் உங்கள் இராசிக்கு 10-ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்களுக்கு சனி லாபாதிபதி. லாபாதிபதி 10-ல் இருப்பது வெகு விஷேசம். விரயஸ்தானத்தையும், சுகஸ்தானத்தையும், சப்தமஸ்தானத்தையும் பார்வை செய்வதால், இதுநாள்வரை பீடித்த நோய் உங்களை விட்டு விலகி விடும். மனகுழப்பம் நீங்கி மகிழ்ச்சி பெருகும். வாகனம், வீடு அமையும்.எப்பொழுது சொந்த வீடு அமையும்?என்று ஏங்கியவர்களுக்கு சொந்த வீடு வாங்கி கிரகபிரவேசம் செய்யும் யோகம் வந்துவிட்டது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் பிரமாதமாக நடக்கும். திருமணமான உங்கள் பிள்ளைகளுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். போகாத கோயில் இல்லை என்று திருமண வரனுக்காக சுற்றி வந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை அமையும். பொன், பொருள் சேரும். ஆனால், சனி பகவான் விரயஸ்தானத்தை பார்ப்பதால் வீண் விவகாரம் செய்ய வேண்டாம். மனதில்பட்டதை பேசுவதை தவிர்க்கவும். 10-ம் இட சனி பிரமாதமான வாழ்க்கை கொடுக்க போகிறான். கையில் இருக்கும் வைரத்தை வைத்துக் கொண்டு கண்ணாடி கல்லை தேட வேண்டாம். அதாவது, தேவையற்ற சிந்தனைகளால் மனதை சிதறடிக்க வேண்டாம். சுக்கிரன் சாரத்தில் வந்த சனிபகவான், உங்களை பாக்கியசாலி, யோகசாலியாக்கும்.

உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்:

சனிக்கிழமையில் ஸ்ரீஅனுமனை வணங்குங்கள். ஸ்ரீஆஞ்சநேயர் பாடல்களை பாடுங்கள். ஸ்ரீஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். சனிக்கிழமையில் எள் சாதத்தை காக்கைக்கு வையுங்கள். விநாயகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வாருங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள். சனிஸ்வர பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும். நல்வாழ்த்துக்கள்.


Tamil Matrimony Community in Vellore :

CHETTIAR MATRIMONY
Chettiarmatri.com is an exclusive matrimony website for Chettiar Community.
Caste: Chettiar
Subcastes:
24 Manai Telugu, Arya Vysyar, Seniyar, Gavara, Komutti, Nattukottai, Pathira etc..

DEVAR MATRIMONY
Devarmatri is an exclusive matrimony website for Devar Community.
Caste:Devar
Subcastes:Kallar, Maravar, Vallambar, Maniakarar, Karumaravar etc.

Tamil-Matrimony-Community-in-Vellore

GOUNDER MATRIMONY
Goundermatri.com is an exclusive matrimony website for Gounder Community
Caste:Gounder
Subcastes:Kongu Vellalar, Vetuvar, Padaiyatchi Gounders Urali Gounder, Nattu Gounder etc.

MUDALIAR MATRIMONY
Mudaliar matrimony.net is an exclusive matrimony website for Mudaliar Community
Caste:Mudaliar
Subcastes:Augamudaiyar, Saivamudaliyar, Saivapillai, Sengunthar Thuluva Vellalar etc...

NADAR MATRIMONY
Nadarmatri.com is an exclusive matrimony website for Nadar Community
Caste:Nadar
Subcastes:Gramani,Kongu Nadarsetc..

NAIDU MATRIMONY
Naidumatri.com is an exclusive matrimony website for Naidu Community
Caste:Naidu
Subcastes:Balija, Bhatraju, Gavara, Idiga, Kamma, Muthuraja, Sowrashtra etc..

PILLAI MATRIMONY
Pillaimatri.com is an exclusive matrimony website for Pillai Community
Caste:Pillai
Subcastes:Augmudaiyar, Illathupillai, Kaikolar, Karuneegar, Saiva Pillai, Sozhia Vellalar, Vellalar etc..

REDDIAR MATRIMONY
Reddiarmatri.com is an exclusive matrimony website for Reddiar Community
Caste:Reddiar
Subcastes:Desuru, Kanchan, Kondal, Musuku, Paknat, Pokkanadu etc..

SC MATRIMONY
SCmatri.com is an exclusive matrimony website for SC Community
Caste:SC
Subcastes:Adi Andhra, Adi Dravida, Adi Karnataka, Ajila, Arunthathiyar, Muchi etc..

ST MATRIMONY
STmatri.com is an exclusive matrimony website for ST Community
Caste: ST
Subcastes: Adiyan, Eravallan, Kadar, Kammara Kanyan, Kaniyan, Mudugar etc..

SS MATRIMONY
SSmatri.com is an exclusive matrimony website for SS Community
Caste: Brahmins
Subcastes: Iyer,Iyengar, Brahmins etc..

UDAYAR MATRIMONY
Udayar.com is an exclusive matrimony website for udayar Community
Caste: Udayar
Subcastes: Kulalar, Malayaman etc..

ARATHY MATRIMONY
Arathy.com is an internet based matrimony website.
Approved Quality service.
It aims to help its members to find their ‘best half’ through internet.

KALYANAVARAN MATRIMONY
Kalyanavaran matrimony.com offers free membership worth 3000/-
Awarded as one of the Best Matrimony Sites

KM MATRIMONY
The most trusted matrimonial firm . Manually screened profiles & contact details
Approved Quality service. Highest level of privacy and security

TAMIL MATRIMONY
TamilMatrimony is celebrated as the Most Trusted Matrimony Brand combining tradition and technology. network of 15 regional portals
and over 2 Crore members, BharatMatrimony operates through strategic partners and affiliates across the globe.

SHAADI MATRIMONY
Shaadi.com, the world's oldest and most successful matrimonial service,has been trusted
since 1996 by peopleall over the world to help them find their soulmates.Approved Quality service.

JEEVANSHATI MATRIMONY
Jeevanshati.com, is an internet based matrimony website. Approved Quality service.
Highest level of privacy and security soulmates. using variety of criteria like caste, religion, or profession

List of Marriage & Community Center in Vellore :

Aruljothi Marriage Intimation Centre
8-9, Anna Bazzar, Vellore-632 004
Phone : 0416 – 2221904

G.R. Thirumana Tagaval Maiyam
24,Nallan Pattarai Big Street,
Kosapet,Vellore-632 001
Phone : 0416 – 2229478

Maha Asta Bandana Nilayam
channampet,
vaniyambadi-635 751
Phone : 04174 – 227933

S.M. Chandrasekara Mudaliar
3,Lakshmana Perumal Mudaliar Street,
Vellore-632 001
Phone : 0416 – 2220777

Sangamam International Marriage Information Centre
13/3A, Veera KL Street, Vellore-632 001
Phone : 0416 – 2235569

T.N.V Thirumana Tagaval Maiyam
5, Thennamaram Street,
Vellore-632 001.
Phone : 0416 – 2220805

Tamilnadu Kalyana Associations 39,
Reddiyappa Mudali Street,
Vellore-632 001
Phone : 0416 - 2222591